சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 27, 2013

குட்டிக்கதை:


குட்டிக்கதை:

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.

அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும்,

கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


யோசனை


பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்...

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி, இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி...

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து...

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள் ஒருத்தி செத்து விடுவாள். அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு...!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்...!


பேராசை


வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது.

எறும்புகள் ஓடோடி வந்தன.

தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன

அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது.

தும்பிக்கையைத் தரையில் வைத்து உறிஞ்சியது.

சர்க்கரையுடன், மண், கல், பாலித்தீன் பைகள் எல்லாம் உள்ளே போயின.

அவதிப்பட்டது.

அளவுக்கு மேலான ஆசை அவதியையே தரும்.


நூறு சதவீதம்


அய்யாசாமி மதிப்பு வாய்ந்த ஒரு நாட்டின் அமைச்சர்.

ஒரு முறை பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து, அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.

அதற்கு அந்த பக்கத்து நாட்டு அமைச்சர், ஜன்னலைத் திறந்து காட்டி ஒரு பாலத்தைக் காட்டினார்.

"அதோ ஒரு பாலம் இருக்கிறதே... அதை நான் தான் கட்டினேன்... அதில் தனக்கு பத்து சதவீதம் கிடைத்தது... அதில்தான் இந்த வசதி வாய்ப்புகளெல்லாம்"

விருந்து முடிந்து சொந்த நாட்டுக்கு அய்யாசாமி வந்தபின், சுமார் ஒரு வருடத்திற்குப் பின், பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.

அய்யாசாமி கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார் பக்கத்து நாட்டு அமைச்சர். அவர் முகக் குறிப்பறிந்த அய்யாசாமி ஒரு ஜன்னலைத் திறந்து,

"அதோ பாலம் தெரிகிறதா?" எனக் கேட்டார்.

"கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?" எனச் சொன்னார் பக்கத்து நாட்டு அமைச்சர்.

அதற்கு அய்யாசாமி சிரித்துக் கொண்டேசொன்னார்,

"ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்"

யார் அந்த நல்லவர்கள் ?


# படித்ததில் பிடித்தது #

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.

தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


"நீதிக்கதை"


"நீதிக்கதை"

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.


ஐயோ....., ஐயோ... சின்னபுள்ள தனமால்ல இருக்கு


ஐயோ....., ஐயோ... சின்னபுள்ள தனமால்ல இருக்கு
-------------------------------------------------------------------
ஒரு வயசு பையனையும்,
ஒரு வயசு பொண்ணையும்
ஒரு இருட்டு ரூம்ல விட்டா என்ன
பண்ணுவாங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அழுவாங்க"

பின்ன ஒரு வயசு தான ஆகுது.
பாவம்ல!!!

Related Posts Plugin for WordPress, Blogger...